மாயமான ஜப்பான் போர் விமானம்
ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.
சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம் காணாமல் போனது. இதையடுத்து அதை தேடும் பணிகளை ஜப்பான் முப்படைகளும் மேற்கொண்டு வந்தன.
இந்த நிலையில் ஜப்பான் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் ஒரு உடல் கண்டு பிடிக்கப் பட்டதாக ஜப்பான் விமானப்படை தெரிவித்துள்ளது.
அது காணாமல் போன போர் விமானத்தில் இருந்த விமானியின் உடல் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜப்பான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அவரது பெயரை ஜப்பான் ராணுவம் குறிப்பிடவில்லை. மேலும் அந்த போர் விமானத்தில் இருந்த துணை விமானியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜப்பான் போர் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்திற்கு பிறகு F-15 ரக போர் விமானங்கள் பயிற்சியை ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :