குஜராத்தில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு

by Staff / 27-11-2023 01:24:20pm
குஜராத்தில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் மாநிலமே தவிப்புக்குள்ளானது. இந்நிலையில், பல பகுதிகளில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்ததாக மாநில அவசர சிகிச்சை மைய அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்தனர். குஜராத்தின் மொத்தமுள்ள 252 தாலுகாக்களில் 234 இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சூரத், சுரேந்திரநகர், கெடா, தபி மற்றும் பருச் ஆகிய இடங்களில் 16 மணி நேரத்தில் 50-117 மிமீ மழை பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories