நெடுஞ்சாலையில் 300 மீட்டர் தூரம் ஓட்டுனர் இன்றி ஓடிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு
சுமார் 300 மீட்டர் தொலைவு வரை சென்ற மோட்டார் சைக்கிள் வழியில் நடந்து சென்ற ஜனார்தன் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையில் 300 மீட்டர் தூரம் ஓட்டுனர் இன்றி ஓடிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு
ஓட்டுனர் இன்றி ஓடிய மோட்டார் சைக்கிள்
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அளவில் புல்லட் மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநர் இன்றி தனியாக சாலையில் சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்
. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் மோட்டார் சைக்கிளை விரட்டி பிடிக்க முயன்றனர். சுமார் 300 மீட்டர் தொலைவு வரை சென்ற மோட்டார் சைக்கிள் வழியில் நடந்து சென்ற ஜனார்தன் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் காயமடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் ஆள் இன்றி மோட்டார் சைக்கிள் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :













.jpg)





