ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள் தனியாக போராட்டம்...

by Admin / 26-07-2021 02:40:47pm
ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள் தனியாக போராட்டம்...


டெல்லியில், முதன்முறையாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் விவசாயிகள் தனியே போராட்டம் நடத்துகின்றனர்.

 டெல்லியில் வெள்ளிக்கிழமை அமளியில் முடங்கிய நாடாளுமன்றம் இரு நாள் வார விடுப்பிற்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது. இதனிடையே மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாடாளுமன்ற கட்டிடம் அருகேவுள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பெண் விவசாயிகள் பலர் பச்சை நிற உடையில், இன்று தனித்து போராட்டம் நடத்துகின்றனர்.
 
போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணியாக செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories