கொடைக்கானலில் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு

by Editor / 21-08-2022 09:24:07pm
கொடைக்கானலில்  வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு

 கொடைக்கானலில் தொடர்ந்து தற்போது மழை பெய்து வருகிறது தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிக அளவில் உள்ளது இந்நிலையில் கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதானசாலையில்  பல இடங்களில் புதியபாலம் அமைக்கும்பணி நடைபெறுவதால் சாலையில் செல்பவர்களுக்கு முறையான மாற்று பாதை அமைத்து தராதால்  சிறிய வகை வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி பழுதுதாகி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுவருவதால் இதன் காரணமாக  அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஜெகதியில் சிக்கி விபத்தை சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது ஆதனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள்  பாலம் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் மேலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணமும் விபத்தில் சிக்காத வண்ணமும் முறையான பாதையை அமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories