ஈரானின் கராச்சி நகரையும் டெக்ரானையும் இணைக்கும் நவீன பாலத்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் வான்வழிதாக்குதல் மூலம் தகர்த்தது.

by Admin / 03-04-2026 10:15:07am
ஈரானின் கராச்சி நகரையும் டெக்ரானையும் இணைக்கும் நவீன பாலத்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் வான்வழிதாக்குதல் மூலம் தகர்த்தது.

ஈரானின் கராச்சி நகரையும் டெக்ரானையும் இணைக்கும் நவீன பாலத்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் வான்வழிதாக்குதல் மூலம் தகர்த்தது. இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 95 பேர் காயமடைந்தனர். இது குறித்து துணைநிலை ஆளுநர் அல்போர்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பொழுது இயற்கை தினம் கொண்டாடிக் கொண்டிருந்த பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். அமெரிக்க அதிபர் டொனால்ட்ரற்றம் இந்த பாலம் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் வரவில்லை எனில் இன்னும் பல அழிவுகள் தொடரும் என்று எச்சரித்துள்ளார் ..ஈரானின் ஏவுகணை விநியோகப் பாதையை துண்டிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது .பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் ஈரானை அடிபணிய வைக்காது என்று அந்நாட்டு வெளிவரவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்கி தெரிவித்துள்ளார் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பகுதிகளிலும் அமெரிக்க படைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளின் உள்கட்டமைப்புகளையும் தாங்கள் கடுமையாக தாக்கி அழிப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனால் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 7.8 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் நூத்தி ஒம்போது டாலராக உயர்ந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் கராச்சி நகரையும் டெக்ரானையும் இணைக்கும் நவீன பாலத்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் வான்வழிதாக்குதல் மூலம் தகர்த்தது.
 
Tags :

Share via
Logo