நடுரோட்டில் போட்டோ எடுத்தவர் கார் மோதி பலி

by Staff / 01-01-2025 01:18:54pm
நடுரோட்டில் போட்டோ எடுத்தவர் கார் மோதி பலி

கன்னியாகுமரி மாவட்டம் நான்கு வழிச்சாலையில் இன்று காலை பாலசுப்பிரமணியம் (50) என்பவர் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு சுற்றுலா வாகனத்தில் வந்த சிலர், தங்களை குரூப் போட்டோ எடுத்துத் தருமாறு கேட்டுள்ளனர். உடனே, பாலசுப்பிரமணியம் சாலையில் நின்று போட்டோ எடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via