சசிகலா புஷ்பா மீது மூன்று பிரிவில் வழக்குப்பதிவு

by Staff / 23-12-2022 05:01:26pm
சசிகலா புஷ்பா மீது மூன்று பிரிவில் வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் அமைச்சர்கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வடபாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு
தூத்துக்குடியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா அமைச்சர் கீதா ஜீவனை பற்றி கொலை மிரட்டல் விடும் வகையில் தரக்குறைவாக பேசினார்.இது தொடர்பாக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரை ஏற்றுக்கொண்ட வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா மீது கொலை மிரட்டல் மற்றும் அவதூறாக பேசியதாக 504, 505, 506(1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo