விஷவாயு தாக்கி 2 பேர் பலி

திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளார்கள் கோவிந்தன், சுப்பராயலு ஆகியோர் விஷவாயு தாக்கி மயங்கியுள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் துப்புரவு பணியாளார்களை மீட்டனர். ஆனல், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :