அமலாக்கத்துறை சோதனைப்பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் இடம்பெற்றார்.

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை டிஎம்கே பைல்ஸ் என்று வெளியிட்டிருந்தார், அப்போது அமைச்சருக்கு நேருவின் சொத்து மதிப்பு சுமார் 2400 கோடி என பாஜக தலைவர் அண்ணாமலை டிஎம்கே files -ல் வெளியிட்டு இருந்தார். ஆனால் அதைவிட இரண்டு மடங்கு நேருவின் சொத்து அதிகம் என்பது தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பல இடங்களில் கே.என். நேருக்கு சொந்தமாக அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளது. சென்னையில் முக்கிய பகுதிகளான ஓஎம்ஆர் -ல் கே என் நேருவுக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் ட்ரூ வேலி ஹோம் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் 1980 காலகட்டத்தில் மத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் கட்டிடம், அப்போது அந்த கட்டிடம் ஏலத்திற்கு வந்த போது அது கே என் நேரு கைவசம் வந்ததாக கூறப்படுகிறது.
அதே போன்று சென்னை படூரில் சுமார் 29 மாடி கட்டிடம் அவருக்கு சொந்தமாக இருக்கிறது என்றும், இது போன்று சென்னையில் பல இடங்களில் அதாவது கே.என். நேருவுக்கு சென்னையில் சொத்துக்கள் இல்லாத இடமே இல்லை என்றும், குறிப்பாக கே.என். நேருவுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பது அவருக்கு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
பலரும் அறிந்த சென்னையில் மிக பிரபலமாக இருக்கக்கூடிய காவேரி மருத்துவமனை கே.என். நேருவுக்கு சொந்தமானது என்றும், அதேபோன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய ரைஸ்மில் என்று சொல்லக்கூடிய திருச்சி லால்குடியில் இருக்கும் காவிரி ரைஸ்மில் கே என் நேருவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சென்னை கிளாம்பாக்கத்தில் கே என் நேருவுக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் இருக்கக்கூடிய அந்த சொத்து மட்டுமே சுமார் 1000 கோடி இருக்கும் என்றும் தகவல்கள் காற்றில் உலாவருகிறது.
கே என் நேருவுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள விவசாய நிலத்தை கே என் நேருவின் அக்கா மகன் நடிகர் ஒருவர் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் திருச்சியிலும் மிகப்பெரிய அளவில் விவசாய நிலம் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைலில் குறிப்பிட்டது போன்று சுமார் கே என் நேருக்கு 2500 கோடி சொத்துக்கள் இருப்பது என்பது குறைத்து மதிப்பிடப்பட்டது என்றும்,
அண்ணாமலை பாதியைத்தான் வெளியிட்டார் முழுவதையும் வெளியிட்டார் என்றால் கே என் நேருவுக்கு சுமார் 5000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக ஆட்சியில் 89, 96, 2006 தற்போது 2021 வரை முக்கிய அமைச்சராக இருந்து வருகிறார் கே என் நேரு.
இதுவரை திமுகவின் மூத்த அமைச்சர்களை குறி வைத்து வந்த அமலாக்கத்துறை, ஏன் கே என் நேருவிடம் மட்டும் வரவில்லை என்று பரவலாக பேசி வந்த நிலையில், தற்பொழுது கே என் நேரு மீதும் கை வைத்துள்ளது.மேலும் கே.என். நேருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் பல ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி, செந்தில்பாலாஜி நண்பர்களது வீடுகளில்சோதனை அமலாக்க துறை பிடியில் சிக்கியுள்ள நிலையில், அந்த லிஸ்டில் எதோ ஒரு வகையில் தப்பித்து வந்த கே என் நேருவும் தற்போது சிக்கியுள்ளதால், இவர் தொடர்பான இடங்களில் நடந்த அமலாக்க துறை சோதனையில் இவர் குடும்ப உறுப்பினர் கூண்டோடு மாட்டும் வகையில் அமலாக்க துறையினரிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகளில் ஒப்பந்தங்களை முடிவுசெய்வது அமைச்சரின் மகன் தான் என்றும் திமுகவை சேர்ந்தவர்களை விட அதிமுகவை சார்ந்த நபர்களுக்கு அதிகளவில் ஒப்பந்தங்களை ஒதுக்கி வருவதாகவும் திமுகவினரே குற்றச்சாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.
Tags : அமலாக்கத்துறை சோதனைப்பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் இடம்பெற்றார்.