ஆதார் அட்டை குறித்த சேவைகளுக்கு அலைய தேவையில்லை

by Staff / 15-09-2022 12:54:58pm
ஆதார் அட்டை குறித்த சேவைகளுக்கு அலைய தேவையில்லை

இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் தொடர்பான விபரங்களையும் இனி உமாங் செயலி மூலம் பெறலாம் என “உமாங் ஆப் இந்தியா“ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனவே இனி உங்களின் ஆதார் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு இனி எங்கும் அலையாமல் இந்த ஆபின் உதவியோடு பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் 9718397183 என்ற நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து அனைத்து விபரங்களையும் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆதார் சேவைகளை UMANG செயலி மூலம் பெற முடியும்உங்களின் ஆதாரில் உள்ள பெயர், முகவரி, போன்ற அனைத்து ஆதார் தொடர்பான விபரங்களைச் சரிபார்த்து கொள்ளலாம்.

ஏற்கனவே நீங்கள் புதிய ஆதாருக்கு விண்ணப்பித்திருந்தால் அதன் ஸ்டேடஸ் எப்படி உள்ளது? பதிவு செய்தல் போன்றவற்றின் நிலையை அறிந்து கொள்ளலாம்.ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் மற்றும் மின்னஞ்சலை சரிபார்க்கலாம்.

ஆதார் நம்பர் அல்லது ஆதார் என்ட்ரோல்மென்ட் ஐடியை கண்டுபிடிப்பது போன்ற 4 புதிய சேவைகளை நீங்கள் இனி வரும் காலங்களில் UMANG செயலி மூலம் பெறலாம்

 

Tags :

Share via

More stories

Logo