தொடர்ந்து விபத்தில் சிக்கிய ஓபிஎஸ் ....ஈபிஎஸ் .

by Staff / 30-10-2022 02:09:27pm
 தொடர்ந்து விபத்தில் சிக்கிய ஓபிஎஸ் ....ஈபிஎஸ் .

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் 50க்கும் மேற்பட்ட கார்களில் பசும்பொன்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன தடுப்பில் ஒரு கார் மோதவே, அது ஏ.டி.எஸ்.பி.யின் காரில் மோதியது. இதில் காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் முஜிபுர் ரஹ்மான் என்பவர் காயமடைந்தார். முன்னதாக சிவகங்கையிலிருந்து மானாமதுரை நெடுஞ்சாலையில், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜய பாஸ்கர், பாஸ்கரன் உள்ளிட்டோர் பசும்பொன் சென்ற போது கார்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் திருவாருர் அதிமுக ஒன்றிய செயலாளர் பலத்த காயமுற்றார். மேலும், 6 கார்கள் சேதமடைந்துள்ளது. ஈ.பி.எஸ் தரப்பை தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via