தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா?” திமுக நாளேடு முரசொலி கண்டனம்.
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமைக்கு இலக்கணம் அல்ல -திமுக. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கே.பாலகிருஷ்ணனுக்கு எதிராக வெளிவந்துள்ள கட்டுரை.
"மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை"தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா? என அவர் பேசியதை தடுக்கவில்லை எனவும் முரசொலியில் விமர்சனம்.தமிழ்நாட்டில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லையா? நடக்கவே இல்லையா? எனவும் கேள்வி.தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை என உருவாக்கத் துடித்து குழப்பம் ஏற்படுத்தும் சிலருக்காக எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்?
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா கே.பாலகிருஷ்ணன் இருக்கிறார்?
Tags : தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா?” திமுக நாளேடு முரசொலி கண்டனம்.