விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

by Staff / 23-09-2023 03:01:18pm
விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போ பேசிய அவர், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி என தெரிவித்தார். இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும் எனவும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்த அவர், கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை என்றார். உயர்கல்வி மருந்துவப்படிப்பில் சற்று ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளதாகவும் அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது எனவும் தெரிவித்தார். ஜீரோ பர்சண்டேஜ் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்த அவர், இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு என்றார். மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி‌ இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது என தெரிவித்தார். மருத்துவ உயர் கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் கிடைக்கவில்லை, எனவும் கூறினார். மேலும் இதில் ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது எனவும் கூறினார்.

 

Tags :

Share via