திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்.

by Editor / 10-05-2022 11:48:17pm
 திருச்சூர் பூரம்  திருவிழா துவக்கம்.

திருச்சூர் வடக்குநாதன்  கோவிலில் இருந்து சாமி சிலையுடன் சிவக்குமார் என்ற யானை கோவில் முன் பகுதி வழியாக வெளியேறி ,ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் துவங்கி 6 - மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் நாளையை தினம் காலையில் பூரம் நிகழ்ச்சி முடிவடைகிறது.
கேரளாவில் திருச்சூர் பூரம் என்பது மே மாதத்தில் பூரம் தினத்தன்று நகரத்தின் மையத்திலுள்ள வடக்குநாதன் கோவில் முன்  கொண்டாடப்படுகிறது.இரண்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து துவங்கி திருவம்பாடி பகவதி அம்மன் கோவிலில் முடிகிறது. 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில்  50க்கும் மேற்பட்ட யானைகள், மாயாஜால வித்தைகளான ஐந்து மேளங்கள் , தொடர்ந்து ஒலிக்கும் பஞ்சவாத்தியம் மற்றும்  நிகழ்ச்சியின் முடிவில் 6 - மணி நேரத்திற்கு மேலாக வெடிக்கும் வான வேடிக்கை என கேரளாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான திருவிழா துவங்கியது . திருச்சூர் பூரம் (பூரங்களின் பூரம்) என்று அழைக்கப்படுகிறது.வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் 20-லட்சத்திற்கும் மேலானோர் இந்த பூர நிகழ்ச்சியில்  கலந்து கொள்வார்கள். கொரோனா கட்டுபாடுகளால் கடந்த இரு ஆண்டுகளாக களையிழந்த இந்த திருவிழா  இன்று பிரமாண்டமாக நடந்து வருகிறது.  20 - லட்சத்திற்கு மேலான  பொதுமக்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது . மொத்தமாக 5000  போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : Thrissur Pooram is the beginning of what is described as the Pooram of Pooras.

Share via

More stories