காணமல் போன 16 வயது சிறுமி.. 11 மாதங்களாக வைத்திருந்த இளைஞர் கைது

by Admin / 20-01-2022 01:06:35pm
காணமல் போன 16 வயது சிறுமி.. 11 மாதங்களாக வைத்திருந்த இளைஞர் கைது

பட்டாபிராம் பகுதியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கடந்த மார்ச் மாதம் காணாமல் போனார் . இதுகுறித்து காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில்  விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞர் தான், மாணவியை கடத்திச் சென்றுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.
 
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜோடியை பிடித்து போலீசார் விசாரித்த போது, இருவரும் காதலித்து வந்ததும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இளைஞரை கைது செய்த போலீசார் ஆள்கடத்தல், போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


 

   


   

 

Tags :

Share via

More stories