குற்றாலத்திற்கு ரூ. 11 கோடி நிதி ஒதுக்கி மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றதாக அமைச்சர் ஏதோ டங் ஸ்லிப்.

by Staff / 30-07-2025 11:39:58pm
குற்றாலத்திற்கு ரூ. 11 கோடி நிதி ஒதுக்கி மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றதாக  அமைச்சர் ஏதோ டங் ஸ்லிப்.

குற்றாலத்திற்கு ரூ. 11 கோடி நிதி ஒதுக்கி மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றதாக அமைச்சர் தெரிவித்த நிலையில், பணிகள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என உறுதிமொழி குழுவினர் அதிர்ச்சி தகவல்.

தென்காசி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டனர். அதாவது தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், புளியரை புதிய காவல் நிலைய கட்டுமான பணி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த நிலையில்> பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும் போது, நிலுவையில் உள்ள 117 உறுதிமொழிகளில் இன்றைய தின ஆய்வின் போது 26 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டன எனவும், மீதமுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் நலத் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பழைய குற்றாலம் தொடர்பான பிரச்சினை இரண்டு துறை அதிகாரிகள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயம் எனவும், இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 மேலும், குற்றாலத்தில் சுற்றுலாத் தள மேம்பாட்டு பணிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த பணிகள் நிறைவு பெற்றதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், உறுதிமொழி குழு ஆய்வு செய்தபோது பணிகள் மேற்கொள்ளப்பட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு ?

 சுற்றுலா தள மேம்பாட்டில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை எனவும், அமைச்சர் ஏதோ டங் ஸ்லிப் ஆகி இது போன்ற கருத்துக்களை தெரிவித்து இருப்பார் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக, அமைச்சர் பணி முடிந்துவிட்டது என்கின்றார். ஆனால் உறுதிமொழி குழுவினரோ பணிகள் ஆரம்பிக்கவில்லை என்கின்றனர்.இதில் எது உண்மை என்று தெரியவில்லை என்றாலும் குற்றாலத்தில் சுற்றுலா தள மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.11 கோடி நிதி எங்கே சென்றது என தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பிள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குற்றாலத்திற்கு ரூ. 11 கோடி நிதி ஒதுக்கி மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றதாக அமைச்சர் ஏதோ டங் ஸ்லிப்.

Share via