திருச்சி - குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து

by Staff / 23-09-2023 04:19:35pm
திருச்சி - குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து

திருச்சியில் இருந்து குஜராத்தின் ஶ்ரீகங்கா நகர் வரை இயக்கப்படும் ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஹம்சஃபர் விரைவு ரயிலில் ரயில் எஞ்சினின் பின்புறம் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் பயணிகள் உடனடியாக இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினரும், ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்கின்றனர்.
 

 

Tags :

Share via
Logo