இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான சிவகிரி தாலுகா ராமநாதபுரம் மேட்டுப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் ராஜ்குமார் @ கோபி மற்றும் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி நன்னகரம் இந்திரா நகரை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் நாகூர் மீரான் @ அமீர் (49) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags : இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு