கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இயக்கப்பட்ட பரிசல் சவாரி தற்காலிகமாக நிறுத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரியில் இயக்கப்பட்ட பரிசல் சவாரி தற்காலிகமாக நிறுத்தம்.இந்த பேரிஜம் ஏரியில் உள்ள நீர் நன்னீராகவும்,தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருவதால், இயற்கை ஆர்வலர்கள், கட்சி தலைவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பரிசல் சவாரி தற்காலிகமாக நிறுத்தம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.மேலும் உயர் அலுவலர்களின் முறையான ஒப்புதல் பெறும் வரை உயர் அலுவலர்களின் அறிவுரைப்படி பரிசல் இயக்குவதை தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாகவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Tags : கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இயக்கப்பட்ட பரிசல் சவாரி தற்காலிகமாக நிறுத்தம்.