அச்சன்கோவில் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் விரட்டும் வீடியோ வைரல்.

by Editor / 01-03-2023 11:25:34pm
அச்சன்கோவில் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் விரட்டும் வீடியோ வைரல்.

தென்காசி மாவட்டம், தமிழக கேரளா எல்லைப் பகுதியில் உள்ள அச்சன்கோவில் பகுதியில் காலை 5 மணி அளவில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் உலா வந்து அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி உள்ளது.

 இதை பார்த்த அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 ஆனால், யானையானது காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள் அங்கும், இங்குமாக உலா வந்ததால் ஏராளமான பொது மக்கள் ஒன்று திரண்டு செல்போனில் சார்ஜ் லைட் அடித்தவாறு கூச்சலிட்டு ஒருசேர யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைராலாகி வருகிறது.

 அதனைத் தொடர்ந்து, அந்த காட்டு யானையானது ஊருக்குள் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், அதிகாலை நேரத்தில் அச்சன்கோவில் பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்து கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 அதனைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிகளுக்குள் இருந்து ஊருக்குள் புகாத வண்ணம் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேவைக்காக ஊருக்குள் யானை கூட்டங்கள் வந்திருக்க வாய்ப்பு அதிகம் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via