காரில் அதிமுக கொடியின்றி பயணித்தார் ஓபிஎஸ்

by Staff / 10-11-2023 01:01:23pm
காரில் அதிமுக கொடியின்றி பயணித்தார் ஓபிஎஸ்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் பயணம் செய்தார்.கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது.

 

Tags :

Share via