முந்திரி பருப்பு பகோடா
தேவை
முந்திரி – 1/2 கிலோ
கடலைமாவு – 1/2 கிலோ
வனஸ்பதி – 1/4 கிலோ
பெ.வெங்காயம் – 1/4 கிலோ
அரிசி மாவு – 150 கிராம்
ப.மிளகாய் – 5
கறிவேப்பிலை – 3 கொத்து
இஞ்சி – சிறிய துண்டு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வனஸ்பதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரிபருப்பு, கடலை பருப்பு, அரிசி மாவு இவற்றை போட்டு பிசறிக் கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளி போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பகோடா மீது கறி வேப்பிலையை வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.
Tags :