காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து வருவதால் வரும் நாட்களில் மழையின் அளவு குறைய கூடும்

by Admin / 11-01-2026 10:30:12pm
காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து வருவதால் வரும் நாட்களில் மழையின் அளவு குறைய கூடும்

 வங்க கடல் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் . திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து வருவதால் வரும் நாட்களில் மழையின் அளவு குறைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 -சென்னை வானிலை ஆய்வு மையம்

 

Tags :

Share via
Logo