இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட ...தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

by Admin / 11-01-2026 10:21:12pm
இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட ...தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கொண்டு வரப்படும் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கை தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கையில் தற்பொழுது நடைபெற்று வரும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கை தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கலைந்திட வேண்டும் என்றும் தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்பு செயல்முறைகளை கொண்டு வருவதற்கு இந்திய அரசு இலங்கை அதிகாரங்களுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி,  இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விசயம் குறித்து  பிரதமர்  கவனத்திற்கு கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று கலாச்சார மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்புகளின் காரணமாக இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமைகளையும் எண்ணங்களையும் நிலை நிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகின்றது என்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் இந்திய மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முன்மொழிவு பட்ட புதிய அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சனை குறித்து பிரதமர்  மேலான கவனத்திற்கு கொண்டு வருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via