ஒ.பி.எஸ்.அழைப்பும் இ.பி.எஸ் நக்கலும்

by Admin / 18-08-2022 11:01:07pm
ஒ.பி.எஸ்.அழைப்பும் இ.பி.எஸ் நக்கலும்


அ.தி.மு.க  இரு அணிகளுக்கு   நீதிமன்றத் தீர்ப்பு  ஒருபொழுதில்  தெம்பையும்  மறுபொழுதில் தளர்ச்சியையும்  ஏற்படுத்துவதாக உள்ளது .நேற்று  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒ.பன்னுீர் செல்வத்தின்  அணியை  உற்சாகப்படுத்தியது .தீர்ப்பு வந்தவுடன்  ஒ.பி.எஸ்..பழைய கசப்பை மறந்து  ஜீன் 23 ஆம்  தேதிக்கு  முன்பிருந்தது  போலவே இணைந்து செயல்படுவோம் .கட்சியை வழுப்படுத்த  பிரிந்து  சென்ற  தினகரன்,சசிகலாவு ம்  வரலாம்  என்று  அழைப்பு விடுத்தார்.  தினகரன் இதை வரவேற்றார்.ஆனால், இ.பி.எஸ் தரப்பு இருவர் அமர்விடம்  மேல் முறையீடு செய்தது. திங்கள் கிழமை  வழக்கு  விசாரணைக்கு  பட்டியிடப்படலாம்  என்கிற நிலையில் இ.பி.எஸிடம் இணைப் பு குறித்து  கேட்கப்பட்ட கேள்விக்கு  பொதுக்குழு கூடுவதற்கு முன்பு பல தலைவர்கள்   அவரோடு   பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.ஆனால் , அவர் அதை  எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டார் .கூட்டத்தை  புறக்கணித்ார் .தலைமை அலுவலகத்தை சூறையாட வைத்தார். அவர் உழைக்காமலே  பதவி மட்டுமே  விரும்புபவர். அவர் பதவி இல்லாமல் இருக்க மாட்டார் .அவர் பையனுக்கு மத்திய அமைச்சர்பதவியை பெறவே  குறியாக இருந்தார்.சட்ட சபை தேர்தலில்  நான்  தமிழகம் முழுதும்சுற்றுப்பயணம்செய்தேன்.அவர் ,அவர் வெற்றியை மட்டுமே பார்த்தார் .அதனால் ,தென் மாவட்டங்களில் .தோற்றோம்.அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால் மூன்று  சதவிகத்தில் தான் தோற்று ஆட்சியை இழந்திருக்கிறோம். எல்லாக் கசப்பை  மறந்து வாருங்கள்   என்றால்   நீங்கள்   செய்த   செயல்  சாதாரணமானதா..?  மேல்   முறையீடு செய்திருக்கிறோம்  .நீதிமன்ற  முடிவுக்கு காத்திருக்கிறோம்.நடப்பது  அனைத்தும் நல்லபடியாக நடக்கும்  என்றார்.

 

Tags :

Share via