அண்ணனை கொலை செய்து வயலில் வீசிய தந்தை மற்றும் , தம்பி ஆகியோர் கைது.

by Editor / 27-04-2024 09:19:32am
அண்ணனை கொலை செய்து வயலில் வீசிய தந்தை மற்றும் , தம்பி ஆகியோர் கைது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த  வடகோவனூர் கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்த கஜேந்திரன் ( 60 ) மனைவி மாலா தேவி (58)  , ஆகியோர்க்கு  வெங்கடேஷ்  பிரசாத் ( 28 ) மற்றும் விக்னேஷ் ( 26 ) என இரண்டு மகன்கள் உள்ளனர் . இந்நிலையில் மூத்த மகன்  வெங்கடேஷ் பிரசாத் தினக்கூலி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து  வருகிறார். . இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து அதில் மன உளைச்சல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது . ஓரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார் அதற்காக அவர் வைத்திருந்த பல்சர் பைக் அடகு வைத்துள்ள இந்நிலையில் வீட்டிற்கு வரும் வெங்கடேஷ் பிரசாத்  தினந்தோறும் விவசாய செய்ததில் எனக்கு ஏதும் பணம் தரவில்லை என பெற்றோரிடம் கேட்டுள்ளார் அதற்கு உரிய பதிலை தராமல் பெற்றோர்கள் சென்று விட்டதால்   ஆத்திரமடைந்த வெங்கடேஷ். பிரசாத்  நேற்று இரவு   மது அருந்து விட்டு வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடம் எனக்கு திருமணம் பண்ணி வைக்க வேண்டும் எனவும் அதிக கடன் தொல்லை உள்ளது 
எனக்கு பணம் தரவேண்டும்  வீட்டில் சண்டையிட்டுள்ளார்    இதை தம்பி விக்னேஷ் மற்றும் தாய் தந்தை  ஆகியோர் தட்டி கேட்டுள்ளார். அனைவரையும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது .
இதை பார்த்துக் கொண்டிருந்த தந்தை கஜேந்திரன், மற்றும் இளைய மகன் விக்னேஷ் இருவரும்  வெங்கடேஷ் பிரசாத்தை அடித்து, கயிற்றை கழுத்தில்  இறுக்கி கொலை செய்து ,உடலை அருகில் உள்ள வயலில் கொண்டு போய் வீசியுள்ளனர். பின்னர் வெங்கடேஷ் பிரசாத் பேண்ட் சர்ட் உள்ளிட்டவைகளை தீவைத்து எரித்துள்ளனர்  தகவல் அறிந்து, சம்பவம் இடத்திற்கு வந்த  கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர்   வெர்ஜினியா மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேஷ் பிரசாத் உடலை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மகன் வெங்கடேஷ் பிரசாத் கொலை வழக்கில்  கஜேந்திரன் விக்னேஷ் ஆகிய  இருவரையும்  கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கூத்தாநல்லூர் அருகே பெற்ற மகனையே தந்தை மற்றும் உடன் பிறந்தவர் கூட்டாக சேர்ந்து அடித்து கொலைசெய்து வயலில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெங்கடேஷ் பிரசாத் கொலை செய்யபடவில்லை எனில் அடுத்த மூன்று நாட்களுக்கு பிறகு பெற்றோர் மற்றும் தம்பியை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.

 

Tags : அண்ணனை கொலை செய்து வயலில் வீசிய தந்தை மற்றும் , தம்பி ஆகியோர் கைது.

Share via

More stories