டாஸ்மாக் நேரம் குறைப்பு

by Staff / 22-08-2023 04:21:29pm
டாஸ்மாக் நேரம் குறைப்பு

 தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும்,  நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும் என்றும், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் முன்னதாக கூறியிருந்தது. தற்போது அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் நேரம் குறைப்பு குறித்து பேசியுள்ளதால், இது குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo