ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

by Editor / 25-06-2022 12:57:57pm
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 4 (கீறியது) இஞ்சி - 1 இன்ச் பூண்டு - 6 பல் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப வறுத்து அரைப்பதற்கு... வெந்தயம் - 1/4 டீஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 4 சோம்பு - 1 டீஸ்பூன் கோங்குரா மசாலாவிற்கு... நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் பூண்டு - 4 பல் புளிச்சக்கீரை - 2 கப் உப்பு - சுவைக்கேற்ப செய்முறை: * வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். * புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். * சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 5-ஜ நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். * பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். * அடுத்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் கோங்குரா கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, 3-4 நிமிடம் மசாலாவில் கோங்குரா கீரையை மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * கீரை நன்கு வெந்ததும், அதை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் தயார். * இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்.இந்த கோங்குரா சிக்கன் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். புளிச்சக்கீரை சற்று புளிப்பாக இருப்பதால், இந்த சிக்கன் மசாலா சற்று புளிப்பாக சூப்பராக இருக்கும்.

 

Tags :

Share via