இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை

by Staff / 11-09-2023 12:59:19pm
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவு நாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், 'ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவு நாளான இன்று ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்தில் அமமுக சார்பில் மலரஞ்சலி செலுத்தினேன்' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via