1 கிலோ கடல் மீன் 1 ரூபாய் -அலைமோதிய கூட்டம்

by Editor / 02-09-2021 08:44:29pm
1 கிலோ கடல் மீன் 1 ரூபாய் -அலைமோதிய  கூட்டம்

மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ளது மன்னார் வளைகுடா மீன்கள் விற்பனையகம். இங்கு மீன்கள் கடலில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ எந்த வகையான மீன்கள் வாங்கினாலும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்தர். அதன்படி காலையில் திறக்கப்பட்ட மீன் கடையில் சுற்றுப்புற பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர்.ரூ 1 க்கு மீன்கள் விற்கப்பட்டதால் காலையிலேயே கூட்டம் அலைமோதியது. நிறைய பேர் நிறைய மீன்களை கிலோ ரூ. 1 க்கு வாங்கிச் சென்றனர்

 

Tags :

Share via