சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் - தமிழக அரசு
தமிழக சட்ட பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி"15ஆவது நிதி ஆணையத்தால் மருத்துவத்துறை மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு 4,280 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தி வட்டார அளவிலான மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் என்று கூறினார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவ பல்கலைகழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும், 120 இந்திய மருத்துவ முறை மருந்தகங்கள், இந்திய மருத்துவ முறையை வைத்து சுகாதார நல்வாழ்வு மையங்கள் ரூபாய் 32 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு நோய் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும். மக்களைத் தேடி மருத்துவம் என்கின்ற திட்டம் ரூபாய் 258 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும், 50 வட்டாரங்கள் மற்றும் 3 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும், 1,1086 பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு போன்ற தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
497 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று நோய் ஆதரவு சேவைகள், இயன் முறை மருத்துவம், சிறுநீரக நோய்களை பராமரித்தல், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிதல் போன்ற சேவைகளை இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
Tags :