ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரசேகருக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரித்து வருகின்றன.கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மறைந்தார். இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வானார்.
ஆனால், உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது.
Tags : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது