பிரபல ரவுடி பூவனூர் ராஜ்குமார் வெட்டிப் படுகொலை.

by Editor / 10-03-2023 02:46:44pm
பிரபல ரவுடி பூவனூர் ராஜ்குமார் வெட்டிப் படுகொலை.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பூவனுர் ராஜ்குமார் என்பவர் மீது கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகில்  பூவனூர்  மர்ம நபர்களால் தற்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலம் கடைவீதியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலையில் பூவனூர் ராஜ்குமார் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via