பிஎஸ் எல் வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி.

பிஎஸ் எல் வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.
EOS-09 செயற்கைகளை விண்ணில் செலுத்தம் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸ் எல் வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
232 வது கிலோமீட்டர் தொலைவில் ராக்கெட் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை என்று முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் ஆய்வுக்கு பின்னர் விரிவான அறிக்கை கொடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். சரியாக 8 நிமிடம் 13 விநாடிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : பிஎஸ் எல் வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி.