10 கிலோ கஞ்சா பறிமுதல்.

by Staff / 16-12-2022 04:19:26pm
10 கிலோ கஞ்சா பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ஜோலார்பேட்டை இருப்பதை போலீசார் சுப்பிரமணி, அருண்குமார், சிலம்பரசன், ஆகியோர் இரயிலில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஏதேனும் கடத்தப்படுகிறதா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது விசாகப்பட்டினம் கொல்லம் வாராந்திர சிறப்பு இரயில் காட்பாடிக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையே வந்து கொண்டிருந்த பொழுது பின்பக்க அன்ரிசர்வ்டு கோச்சில் சோதனை செய்ததில் கேட்பாராற்று கிடந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories