த.வெ.க ஆட்சி கவிழ்ப்பு மதுரையைச்சோ்ந்த மேலும் ஒருவர் கைது.
தமிழக வெற்றிக்கழக ஆட்சியை கவிழ்க்க சரி செய்ததாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது மதுரையைச் சேர்ந்த கணேஷ் நாமக்கல்லை சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராமன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை கணக்கில் வராத 60 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த சதி திட்டத்தின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக திருவல்லிக்கேணி காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுள்ளனர். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தின்போது அதற்கு எதிராக தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் செயல்பட வேண்டும் என்று கணேசன் பேரம் பேசியதாக குற்றம் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :



















