ஓசூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 73 வங்கதேசத்தினரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

by Admin / 16-07-2026 09:00:32am
 ஓசூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 73 வங்கதேசத்தினரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 ஓசூரில்சட்ட விரோதமாக தங்கி இருந்த 73 வங்கதேசத்தினரை மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் தமிழக காவல்துறையின் க்யூ  பிரிவு தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 73 பேரில் 22 ஆண்கள் 23 பெண்கள் 28 குழந்தைகள் அடங்குவர். ஓசூரில் 56 பேரும் நல்லூரில் 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வுத் துறையினர் அண்மையில் உள்ள கர்நாடகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஓசூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டு சேலம் ஆத்தூரில் உள்ள வங்கதேசத்திற்கான சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo