பழனி கோவில் மடத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நில முறைக் கேட்டை கண்டறிய குழு அமைப்பு
பழனி தண்டாயுதபாணி கோவில் மடத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம்முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் கூடுதல் பதிவு தலைவர் உதவி பதிவு தலைவர் மாவட்ட பதிவாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் உரை கேடு நடந்த நாளில் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதோடு சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான மடத்தில் 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு 100 கோடியாகும். நீதிமன்ற உத்தரவின்படி 2025 இல் இந்த நிலம் மீட்கப்பட்டு பக்தர்களின் வாகனங்களை இலவசமாக நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது இந்நிலையில் ஜூலை 6 2026 அன்று போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு வெள்ளைத்துறை சேதுபதி ஆகிய இரு தனிநபர்கள் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த சட்டவிரவாத பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது இந்த முறை கேட்டுக்கு காரணமான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நில முறைகேட்டில் பெரிய அளவிலான கூட்டு சரி இருக்கலாம் என்பதினால் காவல்துறை தலைவர் விசாரணையை சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றி உத்தரவிட்டார்.
Tags :



















