துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதகிருஷ்ணன் வெற்றி பாஜகவினர் கொண்டாட்டம்.

by Staff / 10-09-2025 10:49:57am
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதகிருஷ்ணன் வெற்றி பாஜகவினர் கொண்டாட்டம்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில்  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபி இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை தொடர்ந்து மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பாஜகவினர் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டினார் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன், நகரத் தலைவர் மகேஸ்வரி, நகர பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், கா பாளீஸ்வரன் , சுப்பிரமணியன், பாஸ்கர், முருகன்,  நெடுவயல் பஞ்சாயத்து தலைவர்  முப்பிடாதி, மாவட்ட இளைஞரணி விவேக் குமார் விற்பனை ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக கடையநல்லூர் நகராட்சி கூட்ட அரங்கில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைப்பதற்கு அனுமதி மறுப்பதை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து டிஎஸ்பி மீனாட்சிநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், காளீஸ்வரி,  சியாம்சுந்தர் உட்பட ஏராளமான  போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது

 

Tags : துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதகிருஷ்ணன் வெற்றி பாஜகவினர் கொண்டாட்டம்.

Share via