ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழா
அருள்மிக ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழாவை முன்னிட்டு பரவ காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரங்குடியில் அமைந்துள்ள அருள்மிக ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன்,அருள்மிகு ஸ்ரீ முனியசாமி,ஸ்ரீ பெருமாள்சாமி கோவில் ஸ்ரீ அய்யனார் சாமி திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான இன்று அருள்மிக ஸ்ரீ பெத்தனாட்சி அம்மனுக்கு 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றன பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த அக்கினி சட்டி ஊர்வலம், பால்குடம் ஊர்வலம், அழகு குத்தி பரவ காவடி எடுத்து முக்கிய வீதிகளில் உலா வந்து தங்கள் நேத்திக்கடனே செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags :



















