டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்ய கோரி விவசாயிகள் இன்று வாகன பேரணி:
மதுரை நரசிங்கம்பட்டி பகுதியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு 4000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வணிகர்கள் பொதுமக்கள் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஒரு போக பாசன விவசாய சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் ,நரசிங்கம்பட்டி கொட்டாம்பட்டி ,சிட்டம்பட்டி, டோல்கேட் ,ஒத்தக்கடை மாட்டுத்தாவணி ,அவுட் போஸ்ட் தல்லாகுளம் ,காந்தி அருங்காட்சியகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிப்ப
ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மாநகர காவல்துறையினரிடம் பேசிய மதுரை மாநகர காவல்துறை வடக்கு துணை ஆணையர் அனிதா விவசாயிகள் போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களிடம் கண்ணிய குறைவாக நடந்துகொள்ளக் கூடாது என அறிவுரை.போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் தனிப்பட்ட முறையில் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது.ராட்டத்தில் வருபவர்களிடம் மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் ஏதும் இருக்கிறதா ?என்பதை உறுதிப்படுத்தி அதனை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுரை.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நான்காயத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
டங்ஸ்டன் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து ரத்து செய்யகோரியும் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tags : டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்ய கோரி விவசாயிகள் இன்று வாகன பேரணி: