இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 7 பேர் பலி.
தென்காசி மாவட்டம், இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6பெண்கள் உட்பட 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 40 பேருக்கும் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு சிறுவன் உட்பட 9பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் இருந்து விரைந்து வந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்த நிலையில், இது தொடர்பான தகவல்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆங்காங்கே நிற்கும் நிலையில், மருத்துவமனை வளாகம் ஆனது பெரும் பரபரப்புடன் காணப்பட்டு வரும் நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 7 பேர் பலி.


















