23 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை-வானிலை ஆய்வு மையம்.

by Editor / 21-04-2024 07:26:24am
23 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை-வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, இன்று (ஏப்ரல் 21) தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி  மாவட்டங்களிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடி மின்னல் சமயங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை-வானிலை ஆய்வு மையம்.

Share via

More stories

Logo