மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. இருவர் காயம்-காவல்துறையினர் விசாரணை.

by Editor / 21-04-2024 07:45:39am
மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. இருவர் காயம்-காவல்துறையினர் விசாரணை.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் காரில் நின்று கொண்டிருந்த நவீன்குமார் என்பவர் மீது  நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. இதில் கையில் காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவருக்கும் லேசான காயம்ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்.

 

Tags : மேலூர் அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. இருவர் காயம்-காவல்துறையினர் விசாரணை.

Share via

More stories

Logo