இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதியளிக்கும் அமெரிக்கா

by Staff / 21-04-2024 12:23:06pm
இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதியளிக்கும் அமெரிக்கா

பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த வலியுறுத்தி ஐநாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதற்கு வாக்களிக்க மறுத்தன. அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தையே ரத்து செய்தது. பாலஸ்தீனில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் 1 குழந்தை பலியாகிறது என்று ஐநா நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1 லட்சம் கோடி நிதியளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories