ரயில்நிலையத்தில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு. 

by Editor / 09-12-2024 10:14:53pm
ரயில்நிலையத்தில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு. 

தென்காசி சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடைசிப்பெட்டியில் ஏற முயன்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாசுதேவநல்லூரை சேர்ந்த ஓட்டுநர் செல்வராஜ் என்பவரை சரமாரியாக வெட்டி விட்டு மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், முன்பகை காரணமாக வெட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags : ரயில்நிலையத்தில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு. 

Share via