கிராமசபைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மதுவிற்கு எதிராக தீர்மானம்

by Staff / 15-08-2024 02:50:34pm
கிராமசபைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மதுவிற்கு எதிராக தீர்மானம்

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்சிவிரியில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற, கிராமசபைக் கூட்டத்தில் மதுவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் அன்புமணி பேசினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கி, கிராம பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 

Tags :

Share via