ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர்களை  பணியாற்ற விடாமல் தடுக்கும்  தாலிபான்கள்!

by Editor / 20-08-2021 06:41:32pm
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர்களை  பணியாற்ற விடாமல் தடுக்கும்  தாலிபான்கள்!


ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர்களை பணியாற்ற விடாமல் தலீபான்கள் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. எனினும், உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன.  இதேபோன்று அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.
இந்த நிலையில், ஷரியா சட்டத்துடன் ஒத்து போகும் வகையில், பெண்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான் பயங்கரவாதிககள் தெரிவித்தனர். ஆனால், எங்களை பணியாற்ற விடாமல் தலீபான்கள் தடுக்கின்றனர் என பெண் நிருபர்கள் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ஷப்னம் கான் தவ்ரான் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கூறும்போது, என்னை பணி செய்ய தலீபான்கள் அலுவலகத்திற்குள்ளேயே விடவில்லை. நான் பணியாற்ற விரும்புகிறேன்.  ஆனால், ஆட்சி மாறிவிட்டது.  அதனால் நீ பணியாற்ற முடியாது என கூறுகின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று பெண் பத்திரிகையாளர் கதீஜாவும், தன்னை பணியாற்ற விடாமல் தலீபான்கள் தடுக்கின்றனர்.  எங்களுடைய சக பணியாளர்களையும் தடுத்தனர் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via