தொடர் மழையால்  தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

by Editor / 23-05-2021 05:58:22pm
தொடர் மழையால்  தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

 


 விடிய விடிய இடியுடன் கூடிய தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முதல் இன்று தற்போது வரை தொடர்ந்து இடியுடன் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக குழித்துறையில் 105 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணையில் 1929 கன அடி தண்ணீர் வரத்து உள்ளதால் 1750கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது., 77 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 65.40 கன அடி நீர்மட்டம் எட்டியுள்ளது.
இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான சிதறால் ,திக்குறிச்சி, குழித்துறை, பரக்காணி, அஞ்சாலிகடவு,மாரயபுரம், வைக்கலூர் போன்ற ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க பொதுபணிதுறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் ஆர்கோஷமாக கரைபுரண்டு குழித்துறை தடுப்பணை நிறைந்து தண்ணீர் செல்கிறது.

 

Tags :

Share via